மதுரை அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் 50 நாட்களாக நடைப்பெற்ற அன்னதானம் நிறைவு விழா மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மற்றும் மதுரை மாவட்ட அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பாக கடந்த நவம்பர் 22 ஆம் தேதி முதல் கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அகில பாரத ஐயப்ப சேவா சங்க தமிழ் மாநில தலைவர் எம் விஸ்வநாதன் தலைமையில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா அன்னதானத்தை அன்று தொடங்கி வைத்தார் அறங்காவலர் குழு உறுப்பினர் மணி செல்வம், பொம்ம தேவன், சண்முகசுந்தரம், ராமையா ஆகியோர் முன்னிலை வகித்தனர் தினமும் காலையில் ஆயிரம் பேருக்கு கேசரி, இட்லி, பொங்கல், தக்காளி சாதம் வழங்கப்பட்டது.கடந்த 50 நாட்களாக வழங்கப்பட்ட அன்னதானம் நிறைவு விழா இன்று நடைபெற்றது துணை ஆணையர் சூரிய நாராயணன் அறங்காவலர் குழு உறுப்பினர் பொம்ம தேவன் அன்னதானத்தை துவக்கி வைத்தனர் இந்நிகழ்வில் கோவில் அலுவலர்கள் அறங்காவலர்கள், சேவா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் அன்னதானத்திற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட தலைவர் குருசாமி செயலாளர் பாலமுருகன் துணைத்தலைவர் மனோகரன் உப தலைவர் சுப்பையா மற்றும் கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர் உபயதாரர்கள்,சேவை செய்த தொண்டர்கள், சமையல்காரர்கள், அன்னதான கமிட்டி சார்பில் கௌரவிக்கப்பட்டனர். அன்னதானம் நிறைவு முன்னிட்டு அல்வா, பூரி கிச்சடி இட்லி பொங்கல் வழங்கப்பட்டது.


More Stories
சிவகங்கையில் பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோவில் தலவரலாறு
சிவகங்கை மாவட்டம் கண்டவராயான்பட்டி ஸ்ரீகிணத்தடி காளியம்மன் திருக்கோயில்
உலக புகழ் பெற்ற பிள்ளையார்பட்டியில்2025ம்ஆண்டு ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு:55 சமையல் கலைஞர்கள் கொண்டு செட்டிநாடு முறையில் பக்தர்களுக்கு பிரம்மாண்டமான அறுசுவை அன்னதானம்