March 14, 2026

பண மூட்டையுடன் சுற்றும் ஏ.பி.ஆர்.ஓ.

திண்டுக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் ஏ.பி.ஆர்.ஓ ஆக பணியாற்றிய இளையேந்திரன் மீது பல்வேறு புகார்கள் அடுக்கடுக்காய் கூறப்பட்ட வந்ததை தொடர்ந்து நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.அதன் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு புகார்கள் அனைத்தும் உண்மை என கண்டறியப்பட்ட தன் அடிப்படையில் கடந்த 19.09.2025 அன்று திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு தூக்கி அடிக்கப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 30க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள், மசாஜ் சென்டர்கள், போதை பொருள் கடத்தல் நபர்களுடன் தொடர்பு ஆகியவற்றின் மூலம் மாதத்திற்கு 5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் பெற்ற காரணத்தினால் ருசி கண்ட பூனைக்கு பணியிட மாறுதல் பெருத்த இடியாக விழுந்தது . இதன் காரணமாக தனது தொழில் முறை கூட்டாளிகளுடன் சேர்ந்து மாவட்டத்தில் உள்ள அமைச்சர்கள் ,மாவட்டச் செயலாளர்கள், துறை அலுவலர்கள் ,மாவட்ட முதன்மை அதிகாரி மூலம் பணியிட மாறுதலை நிறுத்தி வைக்க கடும் முயற்சி மேற்கொண்டார். இவரின் தவறான நடவடிக்கைகளை அறிந்து கொண்ட அமைச்சர்கள் இதற்கு செவி சாய்க்க மறுக்கவே துறை அலுவலர்களை நேரில் சந்தித்து தனது எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக பண மூட்டையுடன் சென்னை சென்று தலைமைச் செயலகத்தில் முகாம்மிட்டுள்ளார்.

இவருக்கு பதிலாக புதிதாக நியமிக்கப்பட்ட ஏ.பி.ஆர்.ஓ வை மிரட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் பணி ஏற்க விடாமல் செய்தும் வருகிறார். இடையிடையே பி.ஆர்.ஓ அலுவலக பணியாளர்களை ஃபோனில் அழைத்து துறை அலுவலர்களுக்கு வேண்டியது செய்து கொடுத்து விட்டதாகவும் இன்னும் இரண்டு நாளில் திண்டுக்கலுக்கே ஆர்டர் வாங்கி மீண்டும் பணியில் சேர்ந்து விடுவேன் எனவும் எனக்கு எதிராக ஏதாவது செய்தால் உங்களை தொலைத்து விடுவேன் என மிரட்டி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளதுமீண்டும் திண்டுக்கல் மாவட்ட ஏ.பி.ஆர்.ஓ – ஆக நியமிக்க எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவிட தயாராக இருக்கும் ஏ.பி.ஆர்.ஓ. வல் எவ்வாறு நேர்மையாகவும் நியாயமாகவும் பணி செய்திட முடியும். திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றிய போது உடன் பணியாற்றிய அனைத்து பிஆர்ஓக்களிடமும் தனது சேட்டையை காட்டி மிரட்டி வந்துள்ளார். மாவட்டத்தில் நடைபெறும் எந்த அரசு நிகழ்ச்சிக்கும் முறையாக செல்லாமலும் பணியாற்றாமலும் வருமானம் ஈட்டுவதனையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வந்துள்ளார்.மாவட்ட ஆட்சியர் நடத்திய வீட்டு விழாவிற்கு தேவையான செலவுகளை தானே மேற்கொண்டதாகவும்அந்நிகழ்ச்சியில் அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களும் தானே வாங்கி கொடுத்ததாகவும் தனது நெருக்கமானவர்களிடம் சொல்லி அதற்கும் தனியாக ஒரு கலெக்ஷன் செய்துள்ளார். ஆனால் விழாவில் எந்த அலுவலர்களும் பங்கேற்கவில்லை என்பது உண்மை, இவர் பொய்யான தகவலை பரப்பி இருக்கிறார்.ஊழலில் திளைத்து அலுவலர்களை மிரட்டி பெருவாரியாக மாதம் தோறும் வருவாய் பெற்ற காரணத்தினால் புதிய இடங்களில் இது போன்று வருவாய் பெற இயலாது என்பதனா சம் இயக்குனரின் ஆணையை ஏற்க மறுத்து வரும் இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள இயக்குனர் தயங்குவது ஏன்?இவருக்கு மீண்டும் இங்கு பணி வழங்கப்பட்டால் நேர்மையாக ,கடினமாக உழைக்கும் அலுவலர்களுக்கு தண்டனை வழங்கியது போல் ஆகாதா? இது போன்ற பல்வேறு புகார்களுக்கு விடை கிடைக்குமா? செய்தி துறை நடவடிக்கைகளின் மூலம் ? பொறுத்திருந்து பார்ப்போம்.

Spread the love