March 14, 2026

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்கள் இசைஞானி இளையராஜாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்

தமிழ்திரைப்பட உலகில் அன்னக்கிளி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் இளையராஜா. இவர் பல்வேறு மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
10,000-க்கு அதிகமான பாடல்களை உருவாக்கிய இவர் இசைஞானி என்றும் அழைக்கப்படுகிறார்.

கடந்த 8-ந் தேதி லண்டனில் ‘வேலியண்ட்’ (Valiant) சிம்பொனியை அரங்கேற்றம் செய்தார். இதன்மூலம், முழு அளவிலான மேற்கத்திய சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை இளையராஜா படித்துள்ளார்..இந்தியாவிற்கே பெருமை பெற்றுத்தந்த இளையராஜாவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்தன. மேலும் தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில் சினிமாவின் பிரபலமான இயக்குனர்களான ஆர்.வி. உதயகுமார், பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், பேரரசு மற்றும் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் லண்டனில் சிம்பொனியை அரங்கேற்றம் செய்த இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து மாலையை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்கள்..

Spread the love