December 15, 2025

மதுரை மாநகரில் காணாமல்போன ரூ 41,70,000/- மதிப்புள்ள 278செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

மதுரை மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன்கள் காணாமல் போனதாக பெறப்பட்ட புகார்களில் ஏற்கனவே 09.04.2025-ம் தேதி ரூ-41,70,000/- மதிப்புள்ள 278 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இன்று 06.08.2025-ம் தேதி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் கோவில் சரகம் 28, திருப்பரங்குன்றம் சரகம் 31, தெற்குவாசல் சரகம் – 4, அவனியாபுரம் சரகம் 6, திடீர்நகர் சரகம் 48, திலகர்திடல் சரகம் 54, தல்லாகுளம் சரகம் -103, செல்லூர் சரகம் – 2, அண்ணாநகர் சரகம் 23 செல்போன்கள் என ரூ-44,85,000/- மதிப்புள்ள 299 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியானது மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் நடைபெற்றது.

மதுரை மாநகரில் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டும், சைபர் கிரைம் போலீஸ் தொடர் முயற்சியினாலும், காணாமல் போன செல்போன்கள் மீட்கப்பட்டு 2025-ஆண்டில் தற்போது வரை ரூ-86,55,000/- மதிப்புள்ள 577 செல்போன்கள் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர்கள் தெற்கு, வடக்கு, போக்குவரத்து, தலைமையிடம் மற்றும் ஆயுதப்படை, அனைத்து சரக காவல் உதவி ஆணையர்கள் மற்றும அனைத்து காவல் ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர். காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்க போதிய முயற்சிகள் மேற்கொண்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் வெகுவாக பாராட்டினார்.

Spread the love